Saturday, January 01, 2005

பதிவுகள்

தொலைக்காட்சி, பத்திரிகைகளுக்கு படைப்பாளிகளின் வேண்டுகோள்!

படைப்பாளிகள் அறிக்கை!
கடல் கொந்தளிப்பான சுனாமியால் ஏற்பட்ட பேரழிவு தமிழகத்தையே சீர்குலைத்துள்ளது. தமிழகத்தைப்போலவே ஆந்திரா, கேரளா, அந்தமான் பகுதிகளிலும் இலங்கை, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் ஏற்பட்டிருக்கும் இழப்புகள் சொல்லிலடங்காதவை. பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தில் பங்குகொள்ளும் வகையில் குடியரசுத்தலைவர் புத்தாண்டுதினக் கொண்டாட்டங்ளை ரத்து செய்துள்ளார். மக்களின் உணர்வுநிலையோடு ஒன்றி நிற்கும்வகையில் மக்கள் தொடர்புச் சாதனங்களான தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் புத்தாண்டுதினக் கொண்டாட்டங்களை கைவிட வேண்டுமென்று தமிழக படைப்பாளிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

கூட்டறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ள படைப்பாளிகள்:
தி.க.சிவசங்கரன், கி.ராஜநாராயணன் , வல்லிக்கண்ணன் , கோவை ஞானி , அப்துல் ரகுமான், இன்குலாப், பா.செயப்பிரகாசம் , பிரபஞ்சன், தணிகைச்செல்வன், ஞாநி, ச.தமிழ்ச்செல்வன் ஜெயந்தன், கவிதாசரண் , அமரந்தா , அறிவுமதி , பிரளயன் , கிருஷாங்கினி , மனுஷ்யபுத்திரன், லதா ராமகிருஷ்ணன், க.பஞ்சாங்கம், களந்தை பீர்முகம்மது, மு.அப்பணசாமி, திருவைக்காவூர் கோ.பிச்சை, அழகிய பெரியவன், ஆதவன் தீட்சண்யா, பச்சியப்பன், அ.வெண்ணிலா, சூரியச்சந்திரன், மு.முருகே?, §f."¡fகான், f¡.மாதவரா^, ச.பாலமுருகன்.

visaiaadhavan@yahoo.co.in

0 Comments:

Post a Comment

<< Home