அன்புத்தினம்
இன்றைய காலகட்டத்திலே அன்பர் நாள் என்பது நத்தார்க்கொண்டாட்டம்போல வெறுமனே வர்த்தக முக்கியம் வாய்ந்த நாள் மட்டுமே என்பது என் தனிப்பட்ட கருத்து; ஆனால், இன்றைய நாளிலே அறிந்த ஒரு செய்தி மெய்யாகவே இதை ஒரு குடும்பத்துக்கு அன்புத்தினமாக மாற்றியிருப்பதை இட்டு மிகுந்த மகிழ்ச்சி.
==========================================
பிபிஸி தமிழ்ச்சேவை
14 பிப்ரவரி, 2005 - பிரசுர நேரம் 17:12 கிறீன்விச் நிர்ணயநேரம்
சுனாமியால் அநாதரவான குழந்தையின் பெற்றோரை அடையாளம் காண்பதற்கான மரபணு சோதனையின் முடிவு வெளியானது
இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் கல்முனையில் சுனாமியின் தாக்கத்தின் போது அநாதரவான குழந்தையின் பெற்றோர் யார் என்ற பிரச்சினைக்கு மரபணு சோதனை மூலம் தீர்வு கிடைத்துள்ளது.
முருகுப்பிள்ளை ஜெயராஜ் மற்றும் ஜுனிதா ஆகிய தம்பதியரின் குழந்தையே இதுவென்று மரபணு பரிசோதனையில் தெரியவந்துள்ளது.