சுனாமி~மாமல்லபுரம்
தமிழோசை
11 பிப்ரவரி, 2005 - பிரசுர நேரம் 17:21 ஜிஎம்டி
சுனாமியை அடுத்து மாமல்லபுரத்தில் மேலும் சில சிற்பங்கள் கடலுக்கு வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன
தமிழ்நாட்டின் மாமல்லபுரம் பகுதியில் கடற்கரையோரமாக மணலினால் மூடப்பட்டிருந்த பல்லவர்காலக் குடைச்சிற்பங்கள் சில சுனாமி அலைகளின் தாக்கத்தின் பின்னர் மீண்டும் வெளியே தெரியத் தொடங்கியுள்ளன.
கடற்கரைக் கோயிலை அடுத்து காணப்படும் இந்த சிற்பங்கள், சுமார் 150 வருடங்களுக்கு முன்னர் கடலில் மண்ணினால் மூடப்பட்டு விட்டதாகவும், சுனாமி தாக்கத்துக்கு பின்னர் அவற்றை காணக்கூடியதாக இருப்பதாகவும் சென்னையை சேர்ந்த இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கண்காணிப்பாளர் டி. சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
1 Comments:
தகவலுக்கு நன்றி. பாண்டிச்சேரியைச் சேர்ந்தவன் என்பதால், தகவல் மேலும் சிந்தனைகளை உண்டாக்க்கியது.
Post a Comment
<< Home